கொழும்பு துறைமுகத்திற்கு ‘Schiff 5’ என்ற அதிசொகுசு கப்பல்!

Date:

சுமார் 2,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவை ஏற்றிச் செல்லும் ‘Schiff 5’ என்ற அதி சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பல் உலகின் மிக ஆடம்பரமான கப்பல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

கப்பலின் பணியாளர்களின் எண்ணிக்கை 945 என்றும், 2534 பயணிகளுக்கான வசதிகளை இது வழங்குகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் இருந்து நாளை இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 2030 ஆகும்.

இது தொடர்பில் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளுடன் வரும் இந்தக் கப்பலின் அளவு காரணமாக கொழும்பு துறைமுக பயணிகள் முனையத்தில் நிறுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

 

Popular

More like this
Related

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முற்பணம் கொடுப்பனவு!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபா விசேட முற்பணம்...

வெளிநாட்டு இலங்கையர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: நவம்பரில் 673.4 மில். டொலர் பதிவு

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம், நவம்பர் மாதத்தில் 673.4...

டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு...

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...