போராட்டம் இடம்பெற்ற தினத்தன்று ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சம் ரூபா பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே கோட்டை பொலிஸாருக்கு இன்று (11) உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இந்த தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்ட பணம் இலஞ்சமாக அல்லது வேறு ஏதாவது விடயம் தொடர்பில் பெறப்பட்டதா என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதியின் சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.