சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்காக காத்திருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இந்த வாரத்திற்குள் கிடைக்கப்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சிமன்ற எல்லை நிர்ணய குழு நியமனத்துடன், உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையையும் பெற தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பான திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இது தொடர்பில் சட்டமா அதிபர் தனது கருத்தை தெரிவிக்காததால், உரிய அறிவுறுத்தல்கள் கிடைத்தவுடன் திகதிகள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...