ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது நாட்டின் கடன் முகாமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எகிப்தின் ஷார்ம் எல் ஷெய்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் COP 27 காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்றபோது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் கானாவின் நிதி அமைச்சர் கென் ஒஃபோரியாட்டா மற்றும் மாலைத்தீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் ஆகியோரும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.