கண்டி பதியுதீன் மஹ்மூத் பெண்கள் கல்லூரியின் அதிபர் ஷிஹானா ரஹீம் அவர்கள் சவூதி அரேபியா ஜித்தா நகரில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.
இதனை முன்னிட்டு BMGC Enviornment Teamஇனால் அவரை பாராட்டி கௌரவிக்கும் வகையில் விருந்துபசாரம் ஒன்றினை அவர் கல்வி கற்ற அதே பாடசாலையிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை கல்வி நிர்வாக சேவையில் (SLEAS) இணைந்ததன் பின்னர் தான் கல்விகற்ற அதே பாடசாலையின் அதிபராக அப்போதைய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொறுப்பேற்று பாடசாலையின் தற்போதைய முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பை செய்த நிலையில் திருமதி ஷிஹானா ரஹீம் ஜித்தா சர்வதேச பாடசாலைக்கு அதிபராக செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.