அனைத்து விதமான கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் தனுஷ்க குணதிலக்கவை இடைநீக்கம் செய்ய இலங்கை கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கட் செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ், யுவதியொருவரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தனுஷ்க குணதிலக்க நேற்று (06) சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.