அடுத்த மாத இறுதிக்குள் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு ஏதாவது தீர்வை வழங்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளுடன் இணைந்து இந்த நாட்டிற்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மருந்துப் பற்றாக்குறையை விரைவாக முடிவுக்கு கொண்டுவர முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நாட்டில் உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.