கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (13) எட்டு மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதன்படி , நீர் வெட்டு காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நீடிக்கும்.
பேலியகொடவத்தை, ஜா-எல, வத்தளை, மற்றும் கட்டுநாயக்க-சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், களனி, பியகம, மஹர, தொம்பே, கந்தான, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபையிலும் நீர் தடை அமுல்படுத்தப்படும்.