பங்களாதேஷ் தெற்காசிய ஸெபக்தக்ரோ சாம்பின்ஷிப் போட்டிக்கு புத்தளத்தை சேர்ந்த வீரர்கள் மூவர் தெரிவு!

Date:

எதிர்வரும் டிசம்பர் மாதம் பங்களாதேஷில் நடைபெறும் நான்காவது தெற்காசிய ஸெபக்தக்ரோ சாம்பின்ஷிப் போட்டி 2022 இல் புத்தளத்தைச் சேர்ந்த ஸெபக்தக்ரோ வீரர்கள் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Amateur Sepaktakraw Association of Sri Lanka (ASTASL) அனுப்பி வைத்த உத்தியோகபூர்வ கடிதம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் அதிபர் ஐ.ஏ. நஜீம் அவர்களின் பார்வைக்கு இன்று வழங்கப்பட்டது.

இலங்கை ஸெபக்தக்ரோ அணிக்குத் தெரிவு செய்யப்பட்ட வீரர்களான சகீ அஹமட் அம்ஜுதீன், அதீப் ஹஸன் மற்றும் அஸ்ஹார் ஹுஸைன் (இரட்டை சகோதரர்கள்) ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர்களாவர்.

மேற்படி உத்தியோகபூர்வ கடிதம் பார்வைக்கு வழங்கப்பட்டபோது தனது தனிப்பட்ட மகிழ்ச்சியையும் பாடசாலை சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்த அதிபர் நஜீப் அவர்கள், மேலதிக ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் பங்களாதேஷ் பயணத்துக்கான செலவுகளை ஈடுசெய்வதற்கு பாடசாலை மட்டங்களில் நிதியுதவியை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு புத்தளம் ஸெபக்தக்ரோ விளையாட்டுக் கழகமான (Kumpulan Melayu Puttalam) முகாமையாளர் சகோதரன் ஷிப்லி மர்ஜான் கலந்துகொண்டார்.

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபருக்கும் பாடசாலை முகாமைத்துவத்துக்கும் ஆட்ட வீரர்களும்  கழக முகாமையாளரும் தமது நன்றியைத் தெரிவித்தார்கள்.

Popular

More like this
Related

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...