பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் வெளியாகவுள்ள சட்டமூலம்!

Date:

குறித்த காலத்துக்குள் பட்டம் பெறாத மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இருந்து நீக்குவது தொடர்பான சட்டமூலமொன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவர கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சில மாணவர்கள் 9 முதல் 10 வருடங்கள் வரை பரீட்சைக்குத் தோற்றாமல் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி, அரசியல் பணியை மேற்கொள்வதனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சைக்குத் தோற்றாமல் நீண்டகாலமாக பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களின் கணக்கெடுப்பை குறித்த காலத்துக்குள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பல்கலைக்கழக வேந்தர்களின் ஒத்துழைப்பை பெறவுள்ளதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...