தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் தர்மசேன தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுவோருக்கு பதிலாக வருகைப்பத்திர முறைமை பயன்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இவ்வருடம் பொதுத் தரப் பரீட்சைக்குத் தோற்றிய 311,321 மாணவர்களில் 231,982 பேர் உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.
பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பரீட்சைகள் ஆணையாளர் 9 ‘A’ சித்திகளைப் பெற்ற 10,863 மாணவர்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.
பரீட்சைக்கு தோற்றிய 498 பேரின் பெறுபேறுகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.