புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனுமதி அட்டைகள் இல்லை: புதிய முறை அறிமுகம்!

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் தர்மசேன தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுவோருக்கு பதிலாக வருகைப்பத்திர முறைமை பயன்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வருடம் பொதுத் தரப் பரீட்சைக்குத் தோற்றிய 311,321 மாணவர்களில் 231,982 பேர் உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

பரீட்சைகள் திணைக்களத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பரீட்சைகள் ஆணையாளர் 9 ‘A’ சித்திகளைப் பெற்ற 10,863 மாணவர்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.

பரீட்சைக்கு தோற்றிய 498 பேரின் பெறுபேறுகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...