பொலிஸாருக்கு எதிராக அதிகமான முறைப்பாடுகள்!

Date:

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை காவல்துறையினருக்கு எதிராக தேசிய காவல்துறை ஆணைக்குழுவில், 9,295 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, இந்த முறைப்பாடுகள், தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முறைப்பாடுகளில் சட்டவிரோத கைது, பொய் வழக்குகள், தாக்குதல், சித்திரவதை, பாரபட்சம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மை ஆகியவை அடங்குகின்றன.

இதேவேளை, 2015 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2018 ஆம் ஆண்டில் தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கான பாதீடு ஒதுக்கீடு அதிகரித்துள்ளது.

எனினும் காவல்துறைக்கு எதிரான முறைப்பாடுகள் குறித்த தீர்வுகளை தேசிய காவல்துறை ஆணைக்குழு மேற்கொள்ளவில்லை.

2015ஆம் ஆண்டில் தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு 47,030,000 ரூபா ஒதுக்கப்பட்டது. எனினும் 2018 இல் 127,764,000 ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...