மலேசியா வழங்கிய மருந்துகளை இலவசமாக எடுத்துவரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

Date:

மலேசிய அரசாங்கம் இலங்கைக்கு அவசரமாகத் தேவையாகவுள்ள மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு

நாட்டிற்கான மருத்துவப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் உதவி கோரி இலங்கையின் சுகாதார அமைச்சு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மலேசிய அரசாங்கத்தின் ஆதரவை நாடியது.

அதற்கமைய, மலேசிய சுகாதார அமைச்சில் நேற்றுமுன்தினம் (31) நடைபெற்ற நிகழ்வில், மலேசியாவின் இடைக்கால சுகாதார அமைச்சர் கைரி ஜமால்தீன், 63,100 அமெரிக்க டொலர் (2 கோடியே 23 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா) பெறுமதியான மருந்து பொருட்களை மலேசியாவிலுள்ள ஓய்வுபெற்ற இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல், சுமங்கலா டயஸிடம் கையளித்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் இந்த நன்கொடையை விமானம் மூலம் இலவசமாக கொண்டுவருவதற்கு இணங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கோலாலம்பூரிலிருந்து கொழும்புக்கு யூஎல் 319 என்ற விமானத்தில் இந்த மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...