உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் புதிய அமர்வுகளை மார்ச் 20, 2023 அல்லது அதற்கு முன் நடத்தும் வகையில் தேர்தல்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய சபை உறுப்பினர்களின் பெயர்களை மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடும் வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலை நடத்துவதற்கான சட்ட அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உள்ளதாக குறிப்பிட்டார்.