மாளிகாவத்தை பகுதியிலுள்ள மக்களுக்கிடையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விசேட வேலைத்திட்டம்!

Date:

கொழும்பு மத்தியில் அமைந்துள்ள மாளிகாவத்தை பிரதேசமானது அனைவருக்கும் பரிச்சயமான ஒரு பகுதியாகும்.

இங்கு, குறைந்த வருமானம் பெறும் மக்கள், அதிகளவானோர் தோட்டக் குடியிருப்புகளிலே வசிக்கின்றனர்.

அவர்களில் சிலர் சமீபத்தில் அரசாங்கத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் சொந்தமாக வீடுகளை வைத்துள்ளார்கள்.

இங்கு வசிக்கும் ஆண்களில் பலர் குடிகாரர்களாகவும், போதைக்கு அடிமையானவர்களாகவும் இருப்பதால் ஆதரவற்ற பெண்கள் மீது குடும்ப சுமை விழுகிறது.

இங்கு சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒன்றாக வாழ்வதுடன் கலப்புத் திருமணங்களையும் காண முடியும்.

அதுமட்டுமில்லாமல், இங்கு பெரிய அளவில் இன, மத மோதல்கள் இல்லையென்றாலும், நாடளாவிய ரீதியில் இன அல்லது மத மோதல்கள் ஏற்படும் போது, இந்தப்பகுதியிலும் சிறு சிறு முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில், கொழும்பு மாவட்ட சர்வமதக் குழுவின் கீழ் மாளிகாவத்தை பிரதேசத்திற்கான உபகுழு ஸ்தாபிக்கப்பட்டது.


அதற்கமைய சட்டத்தரணி திருமதி சுமித்ரா சிறிமான்னவின் ஒத்துழைப்பில் இங்கு வாழும் பெண்களை வலுவூட்டுவதற்காக அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் பல்வேறு வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த தோட்டப்பகுதியில் வாழும் மக்கள் பன்மைத்துவம் மற்றும் சகவாழ்வு பற்றி ஒருபோதும் அறிந்திருக்கவில்லை, எனவே அவர்களுக்கு பன்முகத்தன்மையின் மதிப்புகள் பற்றிய சரியான புரிதல் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.

அந்தவகையில் தமது சொந்தப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை உள்ளடக்கிய விதத்தில் கடந்த நவம்பர் 5ஆம் திகதி மாளிகாவத்தை கெத்தாராம விகாரையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்றன.

சவர்க்காரம் தயாரிப்பது எப்படி என்பதை விளக்கும் நடைமுறை அமர்வும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இதற்கு உறுதுணையாக இருந்த வளவாளர் கைத்தொழில் அமைச்சின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அதிகாரியான திருமதி ஷோபனி சமரசிங்க ஆவார்.

மதிய உணவின் பின்னர், இலங்கை சமாதான சபையின் திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன இலங்கையில் பன்மைத்துவம் மற்றும் பன்மைத்துவ சமூகத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான விளக்கக்காட்சியை சமர்ப்பித்தார்.

இதேவேளை பன்மைத்துவத்தின் மதிப்புகள் மற்றும் அந்தந்த கலாச்சார விழுமியங்கள் குறித்து கலந்துரையாடல் பல நடைமுறைச் செயற்பாடுகளுடன் நடத்தப்பட்டதுடன் பங்குபற்றியவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதில் ஈடுபட்டதைக் காணமுடிந்தது.

இதில் 42 பெண்கள் கலந்து கொண்டதுடன் அவர்களில் 25 சிங்களவர்களும் 9 முஸ்லிம்களும் 8 தமிழர்களும் பங்குபற்றினர்.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...