மின்னல் தாக்கி ஒருவர் பலி: மூவருக்கு காயம்!

Date:

புத்தளம் – உடப்பு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (14) மாலை உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

உடப்பு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதி கஜித் (வயது 28) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

உடப்பு – பாரிபாடு கடற்கரையோரத்தில் கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த நால்வர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் கூறினர்.

இதன்போது, மின்னல் தாக்குதலுக்கு உள்ளான குறித்த நால்வரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக உடப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த நபரின் சடலம் உடப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த மூவரும் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் உடப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...