மீண்டும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்!

Date:

 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பம் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தொழிலதிபரான டிரம்ப். குடியரசு கட்சி வேட்பாளராக கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றாா்.

அடுத்து 2020-ஆம் ஆண்டு ஜனாதிபதி தோ்தலிலும் குடியரசு கட்சி சாா்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட டிரம்ப் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினாா்.

ஆனால் பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப், தோ்தலில் மோசடி நடந்துள்ளது எனக் குற்றஞ்சாட்டி பெரும் சா்ச்சை ஏற்படுத்தினாா்.

அவருடைய ஆதரவாளா்களும் அமெரிக்க வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

பெரும் சா்ச்சைக்கு இடையே , 2021 ஜனவரி 20-ஆம் திகதியன்று ஜோ பைடன் அமெரிக்காவின் 46-ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்றாா்.

இவருடைய 4 ஆண்டு அதிபா் பதவிக் காலம் 2025 ஜனவரியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதி தோ்தல் 2024-ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறஉள்ளது.

Popular

More like this
Related

சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (09) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...