இணக்க சபை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒக்டோபர் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய நியமனங்களை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி இலக்கம் 2304/14 வெளியிடப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹெக்டர் யாப்பா நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் திஸாநாயக்க, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திரதாச நாணயக்கார, ஜனாதிபதி சட்டத்தரணி விவேகானந்தன் புவிதரன் மற்றும் ஜே.டபிள்யூ.எஸ். சிறிவர்தன அதன் ஏனைய உறுப்பினர்களாக இருப்பார் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.