வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட சமூக அழுத்தங்கள் அதிகரிப்பதன் காரணமாக மக்கள் அதிலிருந்து விடுபட தவறான வழிமுறைகளை நாடுகின்றனர் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குற்றவியல் பேராசிரியர் நெரஞ்சி விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையே பிரதானமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுபானம் மற்றும் போதைப்பொருள்களின் விலையை அதிகரிப்பதன் மூலம் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை குறையாது என மாற்றுப் பொருட்கள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு மக்கள் திரும்புவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக குற்றவியல் பேராசிரியர் நெரஞ்சி விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் பிரவேசிப்பதற்கு 2023ஆம் ஆண்டின் இறுதிவரை எடுக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கைகள் காட்டுகின்றன.