கடவுச்சீட்டு, விசா மற்றும் ஏனைய கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (நவம்பர் 14) சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரிக் கோப்பினை திறக்க வேண்டும் என அறிவித்துள்ள போதிலும், பலரால் வரி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
பொதுச் செலவினங்களை கடுமையாக கட்டுப்படுத்தும் வகையில் சுற்று நிருபங்கள் பல வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.