இந்த சுற்றறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட வெளிநாட்டில் இருந்து சுகாதார நிலைமைகளை உறுதிப்படுத்த சுகாதார அறிக்கை அவசியம்.
சுற்றறிக்கையின்படி, வெளிநாட்டுப் பிரஜை எந்தக் குற்றத்திற்கும் தண்டனை பெறவில்லை என்பதைக் குறிக்கும் பாதுகாப்பு அனுமதி அறிக்கையும் அவசியம்.
எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சுகாதார பிரகடனம் மற்றும் பாதுகாப்பு அனுமதி அறிக்கை தொடர்பில் மாற்று செயல்முறைகளை அறிமுகப்படுத்துமாறு பதிவாளர் நாயகம் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுக்கு அறிவித்திருந்தது.
இந்த விடயங்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி.அபேவர்தன குறிப்பிட்டார்.
2021 ஆம் ஆண்டு பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, வெளிநாட்டவரை திருமணம் செய்ய விரும்பும் எந்தவொரு இலங்கை பிரஜையும் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன் பாதுகாப்பு அமைச்சின் ‘பாதுகாப்பு அனுமதி அறிக்கைக்காக காத்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.