தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதியும் தமிழ்நாடு மனித நேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், சிறந்த இலக்கியவாதியுமான மு. தமிமுன் அன்சாரி அவர்களுடைய கவிதைத் தொகுப்பு அடங்கிய “புயலோடு போராடும் பூக்கள் “வெளியீட்டு விழா வளைகுடாவின் சார்ஜாவில் நடைபெறவுள்ளது.
இவ்வெளியீட்டு விழா இம்மாதம் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஷார்ஜா சர்வதேச புத்கக்கண்காட்சி வளாகத்தில் நடைபெறுகிறது.
சார்ஜாவிலுள்ள தமிழ் பேசும் மக்கள் இந்த மகத்தான இலக்கிய சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.