ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுவிற்கும் மாவட்ட இணைப்பாளர்களுக்கும் இடையில் சந்திப்பு!

Date:

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுவிற்கும் மற்றும் இலங்கை முழுவதும் மாவட்ட ரீதியாக மாவட்டங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மாவட்ட இணைப்பாளர்களுக்கும் இடையிலான கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) கொழும்பு மருதானையிலுள்ள அஷ்- ஷபாப் (AMYS) தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் போரத்தின் செயலாளர் ஷிஹார் அனீஸ், மீடியா போரத்தின் ஆலோசகர் என்.எம்.அமீன் உற்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசகருமான என்.எம். அமீன் பேசுகையில் ஊடகவியலாளர் முன்னுள்ள பொறுப்பு குறிப்பாக தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் மாற்றின ஊடகவியலாளர்களோடு நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது போன்ற விடயங்கள் பற்றி கவனம் செலுத்துவதும் அவசியம் என சுட்டிக்காட்டினார்.

செயற்குழுவுக்கும் மற்றும் மாவட்டக்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இணைப்பாளர்களுக்கும் இடையிலான கூட்டத்தில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் மாவட்ட இணைப்பாளர்கள் முஸ்லிம் மீடியா போரத்துடன் எவ்வாறு இணைந்து பணியாற்ற வேண்டும் மற்றும் மாவட்டத்தில் அவர்களால் முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் என்பன குறித்தும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் போரத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றதுடன் அதில் கடந்த கூட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பலரும் பல கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர்.

நிகழ்வில் இறுதியில் “தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி?” எனும் தொனிப்பொருளில் விடிவெள்ளிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட செயற்குழு உறுப்பினருமான எம்.பி.எம். பைரூஸ் வளவாளராகக் கலந்துகொண்டு விளக்கமளித்தார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...