140 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட பறவை இனம்!

Date:

140 ஆண்டுகளாக அழிந்துவிட்டது என கருதப்பட்ட பறவை இனம் ஒன்று பப்புவா நியூ கினியா தீவுகளில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.

உடலின் மையப் பகுதியில் செம்மஞ்சள் நிறம் கொண்ட புறா இனம் (black-naped pheasant pigeon) ஒன்றினை 1882-ஆம் ஆண்டுக்குப் பின்னர் காடுகளில் காண முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அந்த இனத்தின் பறவை ஒன்று 140 ஆண்டுகளுக்குப் பின்னர் பப்புவா நியூ கினியா தீவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொலைந்த பறவைகளைக் கண்டுபிடிப்பதற்கு ‘லொஸ்ட் பேர்ட்ஸ்’ என்ற அமைப்பு, விஞ்ஞானிகளுக்கு உதவி வருகிறது. இந்த அமைப்பின் உதவியுடன்  விஞ்ஞானிகள் இப்பறவை இனத்தை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் தெரிவிக்கையில், “இதுவே மகிழ்ச்சியான தருணம். என் கால்கள் நடுங்குகின்றன” என்று சிலிர்ப்புடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

லொஸ்ட் பேர்ட்ஸ் அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “இப்பறவையை கண்டுபிடிப்பதற்காக பல இடங்களில் கெமரா வைக்கப்பட்டது. பல தேடல்களுக்குப் பின்னர் பெர்குசன் தீவு பகுதியில் செப்டம்பர் மாதம் இந்தப் பறவையின் புகைப்படம் எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

பெர்குசன் தீவுப் பகுதியில் 2019-ஆம் ஆண்டே இந்தப் பறவை இனம் கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகளுக்கு தகவல் கிடைத்தது. எனினும், பறவையை விஞ்ஞானிகளால் காண முடியவில்லை. இந்த நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பறவை இனம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் அழிந்துபோன பிற பறவை இனங்களான கிறிஸ்டினா பிக்ஸ் போன்ற பறவைகளையும் கண்டறியலாம் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு பிறந்துள்ளது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...