மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது 53 ஆண்டுகளில் முதல் முறையாக தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
நேற்றைய பொதுத் தேர்தலில் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆசியாவில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தோல்வி இது என வெளிநாட்டு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அவருக்கு இப்போது 97 வயதாகிறது. அவர் எம்.பி பதவியை இழந்தது மட்டுமன்றி, பதிவான வாக்குகளில் எட்டில் ஒரு பங்கிற்கு மேல் பெற முடியாத காரணத்தினால் பிணையையும் இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக மகாதீர் முகமதின் முதல் தேர்தல் தோல்வி இதுவாகும்.
1981 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்த அவர், ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
1987 ஆம் ஆண்டில் அவர் மலேசியாவின் பிரதமராக இருந்தபோது, தீவை வரி இல்லாத புகலிடமாக அறிவித்ததன் மூலம் தீவுக்கு செழிப்பையும் வளர்ச்சியையும் கொண்டு வந்ததற்காக அவர் பரவலாக மதிக்கப்படுகிறார். இந்த நடவடிக்கையானது சர்வதேச விமான நிலையம், படகு சேவைகள் மற்றும் சொகுசு ஹோட்டல்கள் உட்பட சுற்றுலா முதலீடுகளை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.