இலங்கையில் 6.2 மில்லியன் பேர் உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ளதாக UNICEF தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பிலான UNICEF-இன் இரண்டாவது மனிதாபிமான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் தொடர்ச்சியாக பணவீக்கம் , உணவு பாதுகாப்பின்மை மற்றும் வறுமை அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் 6.2 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ளதாகவும் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், போஷாக்கு, சமூக பாதுகாப்பு மற்றும் நீர் ஆகியவற்றில் அதிகரித்த தேவைகள் மற்றும் சேவைகளின் சீர்குலைவு காரணமாக இலங்கையில் குழந்தைகளே நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.