75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மாவீரர் சிலைகளுக்கு அஞ்சலி!

Date:

எதிர்வரும் சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தேசிய மாவீரர்களின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி 75ஆவது தேசிய தினத்தில் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள தேசிய மாவீரர்களின் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவிக்குமாறு செயலாளருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

75 ஆவது சுதந்திர தினத்துடன் இணைந்து இலங்கையின் தேசிய மாவீரர்களின் தகவல் பதிவேட்டை விரைவில் தயாரிக்குமாறும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளை உள்ளடக்கி இந்தப் பணிகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...