COP-27 மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக மாலைத்தீவு சபாநாயகர் பங்கேற்றது ஏன்?: நளீன் சபையில் கேள்வி

Date:

எகிப்தில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான COP-27 மாநாட்டில், அண்டை நாடான இலங்கையின் பிரதிநிதியாக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நசீம் கலந்துகொண்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் எவருக்கும் தகுதி இல்லையா அல்லது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு தகுதி இல்லையா? இலங்கையின் பணத்தை பயன்படுத்த வேறொரு நாட்டைச் சேர்ந்த ஒருவரை எவ்வாறு பங்குபெறச் செய்யமுடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களில் பல கருத்துகள் வெளியாகிவருகின்றன. இது நாட்டின் இறையாண்மை மீறும் செயல் என்றும், நாட்டின் தரத்தை குறைத்து மதிப்பிடும் செயல் என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த கேள்விக்கு ஆளும்கட்சியிலிருந்து உரிய பதில் எதுவும் அளிக்கப்படவில்லை.

இதேவேளை, COP- 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக மொஹமட் நஷீட் வெள்ளிக்கிழமை காலை மாலைதீவில் இருந்து புறப்பட்டார். மேலும் அவர் மாநாட்டில் பங்கேற்கும் இலங்கைக் குழுவின் பிரதிநிதி என்று அந்நாட்டு நாடாளுமன்றம் அன்றைய தினமே அவரது பங்கேற்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

Popular

More like this
Related

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...