FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி: கத்தார் தலைநகரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றம்!

Date:

கட்டார் உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான முன்னேற்பாடுகளும் சீரமைப்பு பணிகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காற்பந்து அரங்கிற்கான தயார்நிலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் வெளிநாட்டில் இருந்து வரும் ரசிகர்கள் தங்குவதற்கான பணிகள் தலைநகர் டோஹாவில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

அதற்கமைய கால்பந்து ரசிகர்கள் தங்குவதற்காக, டோஹாவின் மத்திய பகுதியில், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புகள் வெற்றிடமாக்கப்பட்டுள்ளன.

பத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களில் வசித்தவர்கள் அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டு அவை மூடப்பட்டு விட்டதாக அதில் வசித்த தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், குறிப்பாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்கத் தொழிலாளர்கள் தங்களால் இயன்ற தங்குமிடத்தை தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

நவம்பர் 20 ஆம் திகதி, உலகக் கிண்ண கால்பந்து தொடங்குவதற்கு நான்கு வாரங்களுக்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெளியேறிவர்கள் கூறினர்.

டோஹாவின் ஆல் மன்சூரா மாவட்டத்தில் 1,200 பேர் தங்கி இருந்த ஒரு கட்டடத்தில், இரண்டு மணி நேரத்தில், அவர்கள் காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டனர்.

இன்னும் சில இடங்களில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், அதிகாரிகள் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி,கட்டடத்தின் கதவுகளை பூட்டியதால், அவர்கள் தங்கள் பொருட்களை எடுக்க முடியாமலும் போனது.

பத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இதில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...