STF அதிகாரிகளின் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி!

Date:

மினுவாங்கொடை, பொல்வத்த பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், தற்போது வெளிநாட்டில் உள்ள குற்றவாளியான உரகஹா இந்திக்கவின் சகாக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் சிகிச்சைக்காக மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொத்தல பிரதேசத்தை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் யக்கலமுல்ல பிரதேசத்தில் 4 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தையை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து T-56 ரக துப்பாக்கி, போர 12 வெடிமருந்து துப்பாக்கி மற்றும் ரம்போ ரக கத்தி ஆகியவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் தலைமையக முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...