தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் இன்று (25) கொழும்புக்கு அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரப் பகிர்வு தொடர்பான பொதுவான கருத்துக்கு வருவதற்கு விவாதம் செய்யப்போவதாக தமிழ் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கலந்துரையாடலை இன்று பிற்பகல் சம்பந்தனின் வீட்டில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த கலந்துரையாடலுக்கு அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் விவாதிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர், அடுத்த மாதம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.