கொழும்பு மருதானை சந்தியை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
‘அடக்குமுறைக்கு எதிராக, பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராக, உரிமைகளுக்காகப் போராடுவோம்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இளம் சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், உட்பட பல தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.