இன்று நாட்டுக்கு வந்தடைகிறது சீனாவினால் வழங்கப்படும் 9000 மெட்ரிக் தொன் டீசல்!

Date:

விவசாயிகள் மற்றும் மீன்பிடித்துறைக்காக சீன அரசாங்கம் 9000 மெட்ரிக் தொன் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் டீசலை ஏற்றிய கப்பல் இன்று சனிக்கிழமை (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

‘சுப்பர் ஈஸ்டர்ன்’ என்ற கப்பல் இன்று சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சீனாவினால் இவ்வாறு 9000 மெட்ரிக் தொன் டீசலை நன்கொடையாக வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்திலும்  டிசம்பரிலும் நாட்டை வந்தடையவுள்ள டீசல் தேவையானவர்களுக்கு விரைவில் விநியோகிக்கப்படும் என்று சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

“வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்”  நூல் வெளியீட்டு நிகழ்வு

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய இலங்கை வக்பு நியாய சபையின்...

கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய...

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி மஹிந்த பராக்கிரம...

இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாம்மி!

இங்கிலாந்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம்...