எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய தமது அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது: அரபு இராச்சியத்தின் தூதுவர்

Date:

இலங்கை பிரதமர் தினஷ் குணவர்த்தனவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல் அமெரிக்கும் பிரதமர் அலுவலகத்தில் இன்று   கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதற்கு பெரும் வாய்ப்புகள் இருப்பதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல் அமெரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதில் தமது அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக அரபு இராச்சியத்தின் தூதுவர் குறிப்பிட்டார்.

எரிசக்தி துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகள் போன்ற துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.

அத்துடன், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விரைவாக மீள்வதற்கு உதவிய ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அரசாங்கம் சார்பாக பிரதமர் நன்றி தெரிவித்தார்.

Popular

More like this
Related

‘சமநீதி’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா நாளை கொழும்பில்

'சமநீதி' (Equity) என்ற பெயரிலான புதிய மாதாந்த சஞ்சிகையொன்று இம்மாதம் முதல்...

‘சிசு செரிய’ சேவையை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் புனித குர்ஆன் பல்கலைக்கழகம் உருவாக்கம்: சுல்தான் அப்துல்லா வரலாற்று அறிவிப்பு!

மலேசியாவின் பகாங் (Pahang) மாநிலத்தில் குர்ஆனியக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், 'புனித...

சாரதி அனுமதிப் பத்திர விண்ணப்பதாரர்களில் 8% பேருக்கு உடல்நலக் குறைபாடு.

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் (Driving License) கோரி விண்ணப்பித்தவர்களில் சுமார்...