கடலில் நீராடச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!

Date:

இன்று  கிங்தோட்டை, ஜின் கங்கை  அருகில் கடலில் நீராடச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவின்ன அரபிக் பாடசாலையில் கல்வி கற்கும் காலி ஹிரிம்புரையைச் சேர்ந்த மொஹமட் மொஹமட் யூசுப் (வயது 14) மற்றும் காலி மொரகொடையைச் சேர்ந்த மொஹமட் மில்ஷான் (15) ஆகிய இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் படிக்கும் அரபு பாடசாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், இரண்டு மாணவர்களும் கிங்தோட்டை அருகேயுள்ள கடலுக்கு வந்துள்ளனர்.

அவ்வாறு நீந்திக் கொண்டிருந்த இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து, அரை மணி நேரம் தேடி சடலத்தை அப்பகுதி மக்கள் இணைந்து கரைக்கு  எடுத்து வந்தனர்.

அதற்குள் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததுடன் மற்றைய மாணவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...