குரங்கு அம்மை தொற்றாளர் குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

Date:

  குரங்கு காய்ச்சல் தொற்றுறுதியானவருடன் தொடர்பை பேணிய எவருக்கும் இதுவரையில் அந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறிப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளான நபருக்கு சிகிச்சையளிக்கும்போது, சுகாதார பணிக்குழாமினர், பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாள்கின்றனர்.

எனவே, அவர்களுக்கு வைரஸ் தொற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

துபாயில் இருந்து அண்மையில் நாடுதிரும்பிய ஒருவருக்கு, குரங்கு காய்ச்சல் தொற்று உறுதியானது.

20 வயதான களனி பகுதியைச் சேர்ந்த அவர், தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...