முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது
சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக, பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் உரிய ஆவணங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கை எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.