“திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்” என்ற தலைபப்பிலான குடும்ப அமைப்பு சார்ந்த, மிகத்தரமான, பல்வேறு அனுபவபூர்வமான கருத்துக்களோடு அமையப் பெற்ற , புத்தளத்தை சேர்ந்த எழுத்தாளர் எம்.எச். அப்துர் ரஷீட் அவர்களால் எழுதப்பட்ட நூல் நவம்பர் 02ம் திகதி, மாலை கொழும்பு மருதானையில் அமைந்துள்ள தாருல் ஈமான் மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந் நூல் வெளியீட்டு விழாவில் வளவாளர்களாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ,கலாநிதி, பரீனா ருஷைக், மற்றும் உளவியல் ஆலோசகர், அஸ்மியாஸ் சஹீட் அவர்களும் கலந்துகொண்டு, இந்நூல் தொடர்பான பல்வேறு கருத்துரைகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் இடையே பிரதம அதிதிகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட சில முக்கியஸ்தர்களுக்கும் நூலின் முதற் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ் வைபவத்தில் உரையாற்றிய கலாநிதி, பேராசிரியர் பரீனா ருஷைக் அவர்கள், நூலின் அமைப்பை வெகுவாக சிலாகித்து பேசியதுடன் நூலில் உள்ளடக்கியிருக்கின்ற கருத்துக்களையும் அதுபோல விசேடமாக குடும்ப வாழ்வில் கட்டமைப்பு ரீதியாக, நடைமுறை ரீதியாக நாங்கள் அடைவுகளை நோக்கி செல்லாம் என்ற வழிகாட்டல்களை கொண்டுள்ள மிகவும் பயனுள்ள நூல் என்ற சிறப்பான கருத்தையும் அவர் தன் உரையில் பதிவு செய்து நூலாசிரியரின் வித்தியாசமான இந்த முயற்சிக்கு தன்னுடைய பாராட்டுக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றொரு வளவாளரான உளவியல் ஆலோசகர் , அஸ்மியாஸ் சஹீட் தனது உரையில் , நூல் பற்றிய சிறப்புகளையும் நூலாசிருடைய சிறப்பான பணிகளையும் குறிப்பிட்டு பேசினார்.
சாதாரண மனிதர் மிகத்தரமான ஒரு நூலை எழுத்துலகிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் வழங்கியிருப்பதை பாராட்டி பேசினார்.
சிறப்பான இந் நிகழ்வு திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜலால்தீன் கரீம்தீன் தலைமையில் இடம்பெற்றது.
நூலாசிரியர் எம்.எச். அப்துர் ரஷீட் அவர்கள் ஏற்புரையை வழங்கினார். இவ் விழாவில் நூலாசிரியரின் மனைவி மற்றும் குடும்பத்தை சார்ந்தவர்கள், நண்பர்கள்,
முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
உண்மையிலேயே குடும்ப சீரமைப்பு மிகவும் சீர்குலைந்து போகின்ற
காலக்கட்டத்தில் , தமது நீண்ட கால சமூகப் பணிகளின் விளைவாக பெற்ற அனுபவங்களை சேர்த்து ,தான் ஏற்றுக் கொண்டு வாழ்கின்ற இஸ்லாமிய மார்க்கத்தின் தூய்மையான வழிகாட்டலிலே இந் நூலை எழுதி ,தமிழ் உலகத்திற்கு இந் நூலை வழங்கியுள்ள
நூலாசிரியர் எம்.எச். அப்துர் ரஷீட் அவர்களை நியூஸ் நவ் சார்பாக பாராட்டுகின்றோம்.
நிகழ்வின் இறுதியாக நன்றியுரையை தாருல் ஈமான் நிறுவனத்தின் பிரதான நிர்வாக உத்தியோகத்தர் ரிம்சான் நிகழ்த்தினார்.
Knowledge Box ஊடகம் நிகழ்வுகளை FB வழியாக நேரலையாக ஒளிபரப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.(தர்ஷிகா Newsnow தமிழ்)