‘பல்கலை மாணவர்கள் கல்வியை முடித்து சமூகத்தின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்’

Date:

பல்கலைக்கழக மாணவர்களின் முதன்மை நோக்கமானது கல்வியை விரைவில் முடித்து சமூகத்திற்கான தமது பொறுப்பை நிறைவேற்றுவதே என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் பல்கலைக்கழக கல்விக்கு பணம் செலுத்த வேண்டியிருந்தாலும், இலங்கை மாணவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் முதல் பட்டத்தை பெறுவது பெரும் பாக்கியம் எனவும் அவர் கூறினார்.

மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் படிப்பை முடிக்காமல் 8 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தங்கியிருப்பதால், புதிய மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை இழக்கின்றனர், என்றார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழகங்கள் இணைந்து தீர்மானம் எடுக்குமாறு அமைச்சர் கோரியுள்ளார்.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...