போராட்டத்திற்கு செல்ல வேண்டாம்: ஹிருணிகாவுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Date:

(file photo)

இன்று நடைபெறவுள்ள பாரிய போராட்டத்திற்கு பொலிஸார் இடமளிக்க மாட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு பொலிஸார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இதன்படி, மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வரும் இந்த பேரணி காரணமாக ஏனைய பிரஜைகள் சுதந்திரமாக பயணிக்கும் உரிமை தடைப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர்  கே.ஈ.என்.தில்ருக்கின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டைப் பிரதேசத்தில் அதிகளவான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ளதால், அவற்றில் பணிபுரிபவர்களும், சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தினந்தோறும் வருவோரும் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இடையூறு ஏற்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கோட்டை பகுதியிலுள்ள கடைகளின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாகவும், எனவே இந்தப் போராட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

Popular

More like this
Related

காசா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு

காசா பகுதியில் மிகப் பெரிய நகரான காசா சிட்டியில் பஞ்ச நிலை...

ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவ ஆலோசனையின் பேரில்...

நாட்டின் சில பகுதிகளில் மாலையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று சனிக்கிழமை...

கை விலங்குடன் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட ரணில்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சில நிமிடங்களுக்கு முன்பு...