மத்திய வங்கி முன்னாள் ஆளுநருக்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு!

Date:

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரான அஜித் நிவார்ட் கப்ரால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜராகிய போது குறித்த தனிப்பட்ட முறைப்பாடு கோரப்பட்டது.

அப்போது, ​​அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கை தொடர முடியாது என முதற்கட்ட ஆட்சேபனை தெரிவித்தனர்.

முதற்கட்ட ஆட்சேபனைகள் தொடர்பான எழுத்துமூல உரைகளை டிசம்பர் 15ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்  ஹர்ஷன கெகுனாவல மனுதாரரின் சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.

தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் இந்த தனிப்பட்ட முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய அஜித் நிவார்ட் கப்ரால் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி இந்த தனிப்பட்ட முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...