மாலைத்தீவில் இலங்கை, இந்திய தொழிலாளர்கள் வசிக்கும் கட்டடத்தில் தீ: 10 பேர் பலி

Date:

மாலைத்தீவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து எற்பட்டுள்ளது. இதில் 9 இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், ஒன்பது இந்தியர்களும் ஒரு வங்கதேச பிரஜையும் உயிரிழந்ததாக உறுதி செய்துள்ளார்.

மாலைத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி இருந்தனர்.

இந்த கட்டத்தில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள வாகன பழுது பார்க்கும் கடையில் முதலில் தீப்பிடித்தது.

பின்னர் தீ மளமளவென கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. சிறிது நேரத்தில் அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

பெரும் கரும்புகை வெளியேறியது. அந்த சமயத்தில் கட்டிடத்தில் தங்கி இருந்தவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். தீப்பிடித்து புகை மூட்டம் நிலவுவதை அறிந்ததும் அலறியடித்தபடி எழுந்து வெளியே ஓடி வந்தனர்.

ஆனால் அவர்களால் கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்து வெளியேற முடியவில்லை. இதற்கிடையே தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் கடுமையாக போராட வேண்டி இருந்தது. சுமார் 4 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் மூச்சுத்திணறி மற்றும் உடல் கருகி 10 பேர் உயிரிழந்தனர்.

அவர்களது உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர். பலியானவர்கள் யார், யார் என்று விசாரணை நடத்தப்பட்டது.

மாலத்தீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் சோகமான தீ விபத்து குறித்து வருத்தம் தெரிவித்தது, இந்திய உயிர்கள் இழப்பு குறித்த அறிக்கைகளை ஒப்புக் கொண்டுள்ளது. மாலத்தீவு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக ட்வீட் செய்துள்ளது.

இதேவேளை கட்டிடத்தில் வசிக்கும் 15 பேரை காணவில்லை என்றும்  உடல்கள் கடுமையாக எரிந்துள்ளதால், உடல்களை அடையாளம் காண்பது கடினமாக இருப்பதாக அதிகாரிகள் கூறியதாக சன் அவுட்லெட் ஊடகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...