முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துமிந்த சில்வாவை ஜனாதிபதி மன்னிப்புடன் விடுவிப்பதற்கான தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று ( 24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இணைத்துக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு உருது பெர்னாண்டோ யசந்த கோதாகொட தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.