மைத்திரியின் இரகசியப் புத்தகம் ஒன்று ஜனவரியில் வெளியாகவுள்ளது!

Date:

மக்கள் அறிந்திராத பல உண்மைகளை உள்ளடக்கிய நூல் ஒன்றை தாம் எழுதியுள்ளதாகவும், அதனை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று (20) தெரிவித்தார்.

நெருக்கடி, வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் எதிர்காலம் என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கம் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து தாம் வெளியேறியதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்திய போதும் தாம் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பதற்கு பல நிகழ்வுகள் காரணமாக இருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது வரை மக்கள் அறியாத உண்மைகளுடன் புத்தகம் வெளியான பிறகு அவருக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த 2007ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சராக இருந்த போது தான் முதல் சம்பவத்தை எதிர்கொண்டதாகவும், அண்மைய நாட்களில் இலங்கையில் இல்லாத குறிப்பிட்ட நபரின் டெண்டரில் கையொப்பமிட மறுத்ததால் தான் முதல் சம்பவத்தை எதிர்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் குறித்து பேசக்கூடாது எனவும், அவ்வாறு பேசினால் பதவிகளை வகிக்க முடியாது எனவும் கட்சியின் செயலாளர் மற்றும் அமைச்சர் ஒருவர் தமக்கு கூறியதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Popular

More like this
Related

புனித ரமழான் நோன்பு நாளை முதல் இலங்கையில் ஆரம்பம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

இலங்கையில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (பெப்ரவரி 18, புதன்கிழமை)...

நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் 100 மி.மீ வரை மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது!

இலங்கைக்கு தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த...

கண்டி அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிட்டார் IMF பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா: அரசாங்கத்தின் துரித நடவடிக்கைக்குப் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தலைமையிலான தூதுக்குழுவினர்,...

ட்ரம்ப்பின் ‘அமைதிக் குழுவில்’ இணைய மெக்சிகோ மறுப்பு: பார்வையாளராக மட்டும் பங்கேற்க முடிவு!

காசா போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள...