சஜித்தின் கூட்டணியில் இணைந்த மொட்டு உறுப்பினர்கள்!

Date:

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கிய குழுவொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று (14) கூட்டணி அமைத்தது.

இதன் பிரகாரம்,அனுர பிரியதர்ஷன யாப்பா,சந்திம வீரக்கொடி,சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, ஜோன் செனவிரத்ன, ஜயரத்ன ஹேரத்,
பிரியங்கர ஜயரத்ன ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவே இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டது.

இதன்போது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இவ்வாறு முன்வந்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எதிர்காலத்தில் மேலும் வலுவாகவும் கூட்டாகவும் செயற்படுவதற்கு இந்த ஒற்றினைவு மிகவும் முக்கியமானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நீண்டகாலமாக நடத்தப்பட்ட பல கலந்துரையாடல்களின் பிரதிபலனாக இவ்வாறு ஒன்றிணைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் பலமான சக்தியாக ஐக்கிய மக்கள் கூட்டணியைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பதாகவும் அனுர பிரியதர்ஷன யாப்பா இதன் போது தெரிவித்தார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...