ராமர் பாலம் தொடர்பான மனுவிற்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு!

Date:

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரும் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவிற்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த மனுவிற்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கும் 2 வாரங்களுக்குள் விளக்க மனு தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரும் சுப்ரமணியன் சுவாமியின் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் குழாம் விசாரித்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க முடியுமா, இல்லையா என்ற கேள்விக்கு எளிமையான பதில் தேவை எனவும்  8 வருடங்களாக இதற்கு பதிலளிக்கப்படவில்லை  எனவும் வாதிட்டார்.

மத்திய அரசின்  சார்பில் ஆஜராக வேண்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வௌிநாடு சென்றிருப்பதாலும் தாக்கல் செய்யப்படவுள்ள பதில் மனு தொடர்பில் அமைச்சின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளதாலும் விசாரணையை தள்ளிவைக்க மத்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம் குறித்த மனுவிற்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கும் 2 வாரங்களுக்குள் விளக்க மனு தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கும் உத்தரவிட்டது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...