வரவு செலவுத் திட்ட அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலம் குறித்து கலந்துரையாடல்!

Date:

நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட அலுவலகம் அமைப்பதற்கான வரைவு சட்டமூலம் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்த விசேட கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டமூலம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

இந்நிலையில், குறித்த சட்டமூலம் தொடர்பாக மேலும் ஆய்வு செய்து இரண்டு வாரங்களில் மீண்டும் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...