வழிபாட்டுத்தலங்களுக்கு நிவாரணம் வழங்கும் அறிவுறுத்தல்களை மின்சார சபை பின்பற்றுவதில்லை: சோபித தேரர்

Date:

வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சார கட்டணத்தில் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய அறிவுறுத்தல்களை இலங்கை மின்சார சபை பின்பற்றுவதில்லை என ஓமல்பே சோபித தேரர்  தெரிவித்துள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜானக ரத்நாயக்கவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணமானது பாவனையாளர்களை மிகவும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியதாகவும், இதன் விளைவாக வழிபாட்டுத் தலங்களில் மின்சாரக் கட்டணம் 510% அதிகரித்துள்ளதாகவும் ஓமல்பே சுட்டிக்காட்டினார்.

ஆணைக்குழு தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும், மின் நுகர்வுக் கட்டணத்தில் இருந்து நிவாரணம் வழங்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த போயா தினத்தில் அனைத்து ஆலய விளக்குகளையும் அணைக்க அனைத்து மாகாண சங்க சபைகளும் தீர்மானித்திருந்தன.

பின்னர், ஆணைக்குழு தலைவர் நிவாரணம் வழங்க ஒப்புக்கொண்டார், தலைமை சங்கநாயக்கர்களை சந்தித்ததன் பின்னர் தலைவர் வழங்கிய உறுதிமொழி உறுதிப்படுத்தப்பட்டது  என பீடாதிபதி கூறினார்.

வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத்திலிருந்து நிவாரணம் வழங்க   அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ஆனால் மசோதாவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. “பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து  நிவாரணம் வழங்கும் என நம்புகிறோம்,” என தேரர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...