வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 25ம் திகதி ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்ற நான்கு மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த 64 நாட்களாக கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்தியாவின் தமிழ்நாட்டின் காசிமேடு பகுதியின் கடற்பரப்பில் கரையொதுங்கியது.
மீன்பிடி தொழிலுக்காக சென்ற இவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது முதல் நாளிலேயே படகு என்ஜின் இயந்திரம் பழுது ஏற்பட்டு விட்டதாகவும், படகு காற்றுவாக்கில் அந்தமான் மற்றும் இந்தோனேசியா பகுதிக்கு சென்றதாகவும் காணாமல் போனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இவர்கள் மீட்கப்பட்டு அதிகாரிகளால் உணவு மற்றும் மருத்து உதவிகளையும் வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மேற்குறித்த மீனவர்கள் காணாமற் போன விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு மீனவ சங்கத்தினர், காணாமல் போனவர்களின் உறவினர்களும் கொண்டு வந்திருந்த போதிலும், தேடுதல் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருவதாக காணாமற்போனவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்று வரை கரைக்குத் திரும்பவில்லை என்பதுடன், அம் மீனவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி தமது வாழ்க்கையைக் கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
வாழைச்சேனையை சேர்ந்த கே.யூ. அஸ்ஸனலி, அவரது மகன் ஏ.எம்.முஹாஜித் மற்றும் எம்.எச்.எம்.றிஸ்வி, பி.எம்.இர்ஷாத் ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்து காணாமற் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/ELM.irsath/videos/657082279383092